Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு தொடங்கியது

அரசு பள்ளி மாணவர்களுக்கு  மதிப்பீட்டுத் தேர்வு தொடங்கியது

23-ம் தேதி வரை 3 நாள் நடக்கும் மதிப்பீட்டுத் தேர்வில், முதல் நாளான இன்று தமிழ் பாடமும், நாளை ஆங்கிலப் பாடமும், நாளை மறுநாள் கணித தேர்வும் நடக்கிறது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழக அரசு பள்ளியில் 2 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, அடிப்படை மொழித்திறன் மற்றும் கணிதத் திறனை மதிப்பிட திறன் பிளஸ் திட்டத்தில், மதிப்பீட்டுத் தேர்வு நேற்று முதல் நடக்கிறது.

இது பள்ளி கல்வி துறை சார்பில் நடத்தப்படுகிறது. மாணவர்களின் கற்றல் திறன் குறைபாடுகளில் தேவையான கூடுதல் பயிற்சிகளை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

23-ம் தேதி வரை 3 நாள் நடக்கும் மதிப்பீட்டுத் தேர்வில், முதல் நாளான நேற்று தமிழ் பாடமும், இன்று ஆங்கிலப் பாடமும், நாளை கணிதத்துக்கும் தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு தேர்விலும் 10 வினாக்கள் இடம்பெறும். தேர்வை முடிக்க 40 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழ், ஆங்கில எழுத்துகளை அடையாளம் காணுதல், எளிய சொற்களை வாசித்தல், எழுதுதல், எண்களை எழுதுதல், வாய்ப்பாடுகள் கூறுதல், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்கள் மதிப்பிடப்படும். 2 முதல் 5-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க வேண்டும். 6 முதல் 9-ம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது 40 சதவீத மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், கற்றலில் கூடுதல் கவனம் தேவைப்படும் மாணவர்கள் கண்டறியப்படுவர். அவர்களுக்கு ‘திறன் பிளஸ்’ திட்டத்தின் கீழ் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும்.

முந்தைய செய்தி
Collectors lead Commemoration Day events
அடுத்த செய்தி
‘தவெக ஆட்சியில்தான் வடிகால் பணிகள் நிறைவு’

தொடர்புடைய செய்திகள்